கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செல்வது கமராவில் பதிவாகி உள்ளது

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)கொரோனாவின் தாக்கம் அதிகாரித்து வருவதான சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செல்வது கமராவில் பதிவாகி உள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் இன்று(18) கூட கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட மருதமுனை ,கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி ,சம்மாந்துறை ,நிந்தவூர், பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் பொது நிறுவனங்களில் இவ்வாறான நடைமுறைகள் கவனயீனமாக பின்பற்றப்படுகின்றன.

கமராவினை கண்டவுடன் முகக்கவசம் சரி செய்வதும் சிலர் எதுவித முகக்கவசமும் இன்றி தத்தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பொது இடங்களை நோக்கி வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

சுகாதார அதிகாரிகளும் இவ்விடயத்தினை  கவனமெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறிப்பாக பிரேத்தியேக வகுப்பிற்கு வெளியிடங்களில் இருந்து வருகின்ற மாணவ மாணவிகள் எவ்வித சுகாதார  நடைமுறைகளையும் பின்பற்றாமல் பேரூந்துகளிலும் பிரதான வீதிகளிலும் வருவதை காண முடிந்தது.

இது தவிர சுகாதார பகுதியினர் தற்போது முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி பேணுதல்  கைகழுவுதல் உள்ளிட்ட  கொரோனா விழிப்புணர்வினை மேற்கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.