மின்விசிகளை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு

 .சுகிர்தகுமார் 0777113659 


  அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்ல மாணவர்கள் மற்றும் நோய்வாய்ப்புற்ற முதியவர்களுக்கான இலவச வைத்திய முகாம் மற்றும் இல்லத்திற்கான மின்விசிகளை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு விபுலானந்தா சிறுவர் இல்ல மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அக்கரைப்பற்று ஒலிவியா தனியார் வைத்தியசாலை ஒன்றினால் முற்றும் முழுதாக இலவசமான முன்னெடுக்கப்பட்ட  குறித்த சேவை மூலம் இல்ல மாணவர்களும் முதியவர்களும் பெரும் நன்மையடைந்தனர்.

குறித்த வைத்தியாலையின் பணிப்பாளர்களான வைத்தியர் சனூஸ் தலைமையில் இடம்பெற்ற இலவச வைத்திய முகாமில் வைத்தியர் சபீல் மற்றும் வைத்தியர் ரஸ்னிதா வைத்தியர் வைத்தியர் தனுபர் முகாமையாளர் றியாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விபுலானந்தா இல்லத்தினுடைய ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளையின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாமினூடாக மாணவர்களும் இயக்குனர் சபை உள்ளிட்ட பொதுமக்களும் சிகிச்சை பெற்றுக்கொண்டதுடன் மேலதிகமான சிகிச்சை பெறுதல் மற்றும் வைத்திய நிபுணர்களை சந்திக்கும் வாய்ப்பினையும் குறித்த வைத்தியசாலையின் நிருவாகம் இலவசமாக இதன்போது பெற்றுக்கொடுத்தது.

சமூக சேவை நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட இச்சேவையின் பின்னர் வைத்தியர்களினால் இல்லத்திற்கு தேவையான மின்;;;விசிறிகளும் அன்பளிப்பு பொருட்களாக வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் இல்ல இயக்குனர் சபை உறுப்பினர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் இல்லத்தலைவரினால் வைத்தியசாலை நிருவாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.