அக்கரைப்பற்று #ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில்

 


வி.சுகிர்தகுமார் 0777113659அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருவதுடன்; மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
அதிகமான தமிழ் மக்கள் இன்று அதிகாலை வேளையில் மருத்துநீர் வைக்கும் பாரம்பரிய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
பின்னர் நீராடி புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு இறைவழிபாட்டில் கலந்து கொண்டனர்.
இறைவழிபாட்டில் ஈடுபட்ட மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
ஆலய தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.
இதேநேரம் பலர் தமது வழிபாடுகளை வீடுகளில் இருந்தாவாறே பொங்கல் பூஜை வழிபாடுகளையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில்  ஆலயங்கள் தோறும் அமைதியான முறையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.