அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடுவதற்காக மக்கள் தயார்


 


வி.சுகிர்தகுமார் 0777113659   அரசாங்கம் 5000 ரூபாவை மக்களுக்கு வழங்கிவரும் நிலையில் அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடுவதற்காக மக்கள் மகிழ்ச்சியுடன் தயராகி வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிந்தது.
இNநேரம் பலர் தமது வழிபாடுகளை வீடுகளில் இருந்தாவறே மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் பொங்கல் பூஜை வழிபாடுகளையும் மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனார்.
இந்நிலையில்  ஆலயங்கள் தோறும் அமைதியான முறையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலைமுதல் அதிகளவான மக்கள் சித்திரைப்புத்தாண்டை கொண்டாட்டத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் மற்றும் ஆடைகளையும் கொள்வனவு செய்து வருகின்றனர்.
ஆயினும் அதிகளவானவர்கள் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் ஆடை நிலையங்களில் குவிந்து காணப்பட்டனர்.
சந்தையில் மக்களுக்கு தேவையான அனைத்துவிதமான பொருட்களும்; விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.