வெறிச்சோடிக் காணப்படும் மட்டக்களப்பு நகரமும் - அடைபட்ட ஐந்து கிராமங்களும்!


 


மட்டக்களப்பு மாவட்ட கொவிட்  தடுப்பு செயலணியின் நேற்றைய (18) தீர்மானத்திற்கு அமைவாக இன்றைய (19) தினத்திலிருந்து மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் எனும் தீர்மானத்திற்கு அமைவாக அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து விற்பனை நிலையங்களும் இன்றைய (19) தினம் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. 


அதேவேளை நேற்றைய தினத்தில் இருந்து மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்றைய தினத்திலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட வேண்டுமென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதற்கு அமைவாக குறித்து 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் போலீசார் மற்றும் இராணுவத்தினருடன் சுகாதார துறையினரும் இணைந்து குறித்த பிரதேசங்களில் வீதித் தடைகளை மேற்கொண்டிருப்பதுடன், பொலிசாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்