மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு


 


மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 


2020ஆம் ஆண்டு தேருநர் இடாப்பு மீளாய்வின் போது நியாயமான காரணம் எதுவுமின்றி கிராம உத்தியோகத்தரினால் பெயர் நீக்கப்பட்டதனால் குறித்த கிராம உத்தியோகத்தருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்த மனித உரிமை ஆணைக்குழுவானது பாதிக்கப்பட்ட தரப்பினர்களின் பெயர்களை ரிதிதென்னை பிரதேசத்திலேயே பதிவு செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையார் R.சசீலன் அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். இருந்த போதிலும் மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையார் R.சசீலன்அவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலை புறக்கணித்து குறிப்பிட்ட நபர்களின் வாக்காளர் இடாப்பினை ஏறாவூர் - 01A எனும் கிராம உத்தியோகத்தர் பிரிவிலேயே பதிவு செய்ததாக அறியப்படுகின்றது.

குறித்த ஏறாவூர் - 01Aக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரை  பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த கிராம உத்தியோகத்தர் எதுவித பரிந்துரை வழங்கவில்லை என்றும் குறித்த கிராம உத்தியோகத்தரின் சம்மதம் இன்றியே பதியப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்தது. இதன் காரணமாக மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையார் R.சசீலன் அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது.