புத்தளம் நகர சபை தலைவர் உயிரிழப்பு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சாரதி உட்பட மூவர் கைது


 புத்தளம் நகரபிதா கே. ஏ. பாயிஸ் 53 ஆவது வயதில் காலமானார். வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சில நிமிடங்களில் இவர் காலமானார். 

மரணத்துக்கான காரணம் இதுவரை தெளிவு படுத்தப் படவில்லை.  வைத்தியசாலையில் அனுமதித்தவர்கள் மாயம் என்ற தகவலும் அங்கிருந்து கிடைக்கப் பெற்றது. புத்தளம் மற்றும் வனாத்தவில்லு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 முன்னாள் கால்நடை பிரதி அமைச்சரான இவர்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் ஆவார்.  கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.Advertisement