பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் முயற்சியால் ஒலுவில், பாலமுனை தொடக்கம் அட்டாளைச்சேனை வரையிலான கடற்கரை வீதிகளுக்கு காபட் இடும் பணி ஆரம்பம்.
நாட்டில் உள்ள ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் 41 மில்லியன் ரூபா செலவில் ஒலுவில், பாலமுனை தொடக்கம் அட்டாளைச்சேனை வரையிலான கடற்கரை வீதிகளுக்கு காபட் இடும் வேலைத்திட்டம் இன்று (2021.06.28) கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன் நிகழ்வு பாலமுனை பிரதேசத்தின் மின்ஹாஜ் வட்டாரத்தின் செயற்பாட்டாளர் M.A.அபூபக்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் M.S. உதுமாலெப்பை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் A.L.M.அமானுல்லாஹ் உப தவிசாளர் S.M.M. ஹனிபா ஆகியோர் உட்பட மேலும் பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.


Post a Comment
Post a Comment