அம்பாரை மாவட்ட,கடற்கரை பகுதியில் உயிரிழந்த கடல் ஆமைகள்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாரை மாவட்டத்தில் பெரிய நீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் சனிக்கிழமை   (19)   உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள்  கரையொதிங்கியுள்ளது . 

இன்னும் பல ஆமைகள் கடலில் உயிரிழந்த படி அடைந்து வருவதாகதாக இன்று கடல் தொழிலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர் . கடந்த 21 ஆம் திகதி X - Press Pearl கப்பலில் தீ பரவியதிலிருந்து இதுவரை 40 இற்க்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 05 டொல்ஃபின்களின் உடல்களும் கரையொதுங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

 கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் , கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் , மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன் , இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது