அரச மருத்துவர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரச சேவைகள், உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேடவர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய அரச மருத்துவர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் அனைத்து தரத்திலும் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுடன் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment