பெரியநீலாவணை பொதுக்குளியல் அறைகள்,,புனரமைப்பு


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பில் பாழடைந்திருந்த  பொதுக்குளியல் அறைகள் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று(16) குறித்த  நிகழ்வு கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய  இடம்பெற்றதுடன்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட  இளைஞர் தலைவர் துசானந்தன் சமூக சேவகர்  தாமோதரம் பிரதீபன் இணைந்து திறந்து வைத்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின்  பாராளுமன்ற  உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் கடந்த சனிக்கிழமை(10) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்ததுடன்  இப்பகுதிக்கு  கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஜே. அதிசயராஜூடன்  நேரில் சென்று மக்களை  சந்தித்து    கலந்துரையாடலில்   ஈடுபட்டிருந்தார்.

 
இதற்கமைய பிரதேச செயலாளர் மற்றும்  அப்பகுதி மக்களினால் விடுக்கப்பட்ட  கோரிக்கைக்கு அமைய   பாழடைந்து காணப்பட்ட இக்குழியலறை அடங்கிய தொகுதி கட்டடம் முழுமையாக  அன்றைய தினம்  சுத்திகரிப்பு செய்யப்பட்டு  புனர்நிர்மாணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று    மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.  
 

 இதன் போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட  இளைஞர் தலைவர் துசானந்தன் அம்பாறை மாவட்டத்தில்   கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இத்தொடர்மாடி வீட்டுத்திட்டம் பல  குறைகளுடன்  நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல்   இருப்பது கவலைக்குரியது.இங்கு  வாழும் மக்கள்  பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றதை நேரடியாக நான் பார்த்தேன்.இந்த தொடர்மாடி குடியிருப்பு வீதிகள்  குன்றும் குழியுமாகக் காணப்படுவதை ஏற்க முடியாதுள்ளது.எதிர்வரும் சில தினங்களில்  முதற்கட்டமாக பல உதவிகளை  வழங்க  நடவடிக்கை  மேற்கொள்ள உள்ளேன் என குறிப்பிட்டார்.

மேற்கூறிய   வேலைத்திட்டமானது   தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டதற்கிணங்க புலம்பெயர் மக்களின் ஆதரவினால் வழங்கப்பட்டதுடன்  அப்பகுதி கிராம சேவகர்    உட்பட  இளைஞர்களும் பொதுமக்களும் நிகழ்வில்  பங்குபற்றியிருந்தனர்.