அக்கரைப்பற்று ஜெஸ்வர் உமர்லெப்பை, இலங்கை உதைபந்தாட்டச் சங்கத்தின் (Football Sri Lanka-FSL) தலலைராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் ஜெஸ்வர் 96 வாக்குககளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட Dr. மானில் பெர்னாண்டோ (முன்னாள் தலைவர் மணிலால் பெர்னாண்டோவின் மகன்) 90 வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த உதைபந்தாட்ட வீரரான ஜெஸ்வரின் இந்த அடைவு மகிழ்ச்சி தருகிறது. நாட்டிலும் நாடு கடந்தும், பல்வேறு உதைபந்தாட்ட நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட்டு வருபவர்.
இலங்கை உதைபந்தாட்டச் சங்கத்தில் பல நிர்வாகப் பதவிகளை வகித்து வந்திருக்கிறார். அதன் அண்மைய பொதுச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச உதைபந்தாட்டச் சங்கமான FIFA வின் சிரேஷ்ட ஆட்ட நடுவராகவும் (Senior Match Referee) இருந்தவர். ஆசிய உதைபந்தாட்டக் கூட்டமைப்பில் (AFC) Match Commissioner ஆகவும் இருந்திருக்கிறார்.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் உமர்லெப்பை சேரின் மகனான ஜெஸ்வர், எங்களோடு அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
இந்த அடைவு அவ்வளவு இலகுவானதல்ல. கடின உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி இது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


Post a Comment
Post a Comment