மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இலங்கைக்கு..!


 


ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. 

அதன்படி, 15000 டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், குறித்த தடுப்பூசி தொகை கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, நாட்டில் இதுவரையில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 88 பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

- Kayal