வீட்டுத்தோட்ட செய்கையினை வெற்றிகரமாக முன்னெடுக்கும் ஓய்வு நிலை உத்தியோகத்தர்


 மேலைத்தேய நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு தருவிக்கப்படுகின்ற  சுவைமிகு அப்பிள் பழங்களை  இலங்கையின் வரண்ட பிரதேசமான அம்பாரையிலும் சேதனப்பசளையைப் பாவித்து உற்பத்தி செய்யலாம் என்பதை அட்டாளைச்சேனையில் வாழ்ந்துவரும் ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் நிருபித்துள்ளார்.

 அட்டாளைச்சேனையில் வாழ்ந்துவரும்  ஓய்வு நிலையிலுள்ள எ.எல்.அப்துல்  கபூர் என்பவரே தனது ஓய்வு நேரங்களை மிகவும் பிரயோசனமாகக்களிக்க எண்ணி குடியிருப்பு  நிலமொன்றில் வீட்டுத்தோட்ட செய்கையினை ஆரம்பித்தார்.
 ஏதாவது புதுமையாக இருக்க வேண்டுமென்று நினைத்த அவர் தான் எங்கயோ படித்த 'மாசான்' எனும் சுவைமிகு அப்பிள் மரத்தை வரவளைத்து நாட்டினார். உப உணவுப் பயிர்செய்கை , வீட்டு மட்டத்திலான கால்நடை வளர்ப்பு, சிறுசிறு மரக்கறிப்பயிர் செய்கை  போன்றவைகளில் மிகவும் ஆர்வம் கொண்ட போதிலும் அரச உத்தியோகம் ஒன்றிலும்  தான் கடமை பார்ப்பதால் தனது ஆர்வமான எண்ணங்களை செயல்படுத்த முடியாது போய்விட்டதாகக் அப்போது கவலைப்பட்டார்.
இவ்வேளைதான் அவரது ஓய்வுக்கான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் தற்போதய ஜனாதிபதி கோத்தபாயராஜபக்ஸவின்  எண்ணக்கருவில் உருவான சுபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவுக்கு அமைவாக   'சேதனப் பசளையை பாவிப்பதன் மூலம் நஞ்சற்ற உணவை உட்கொள்வோம்'  என்ற தொனிப்பொருளால் மிகவும் கவரப்பட்டார் கபூர்,
 தனது முயற்சி புதுமயானதாக இருக்க வேண்டுமென நினைத்தார். அவ்வாறே   'மாசான்' எனும் ஒருவகை  அப்பிள்  மரத்தை நாட்டினார். பராமரித்தார். தனது குடியருப்பு நிலத்திலேயே  சேதனப்பசளையை உற்பத்தி செய்யவும் தொடங்கினார். தனது கொடியின் அபரிதமான வளர்ச்சியும்  கவர்ச்சியும் அவரை மேலும் உற்சாகப்படுத்தியது.  இதனால் அவர் இச்செயற்பாட்டில் மிகவும் உன்னிப்பாக இருந்து அப்பிள்  மரத்தைப் பராமரித்தார். தற்போது  அப்பிள் மரம்; காய்க்க தொடங்கியது. இனடிப்படையில் நேற்று இவர் ஒருமரத்தில் மாத்திரம் சுமார் 75 இற்கு மேற்;பட்ட அப்பிள்களை பறித்துள்ளார். சுவைமிகு இப்பழங்களை  தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்தளித்தார். இதனால் உந்தப்பட்ட இவரது நண்பர்கள் தாமும் இம்முயற்சியில் ஈடுபடுவது பற்றி இவரிடம் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டு வருகின்றனர்.
இதேவேளை  ஓய்வு நிலையிலுள்ள அப்துல்  கபூர் உலகிலேயே மிகவும் சிறந்த  வாசனை திரவியங்களை உற்பதி செய்வதற்கு மூலப்பொருளாகப்  பாவிக்கப்படும் 'வல்லப்பட்டை என்று அழைக்கப்படும் 'யுபசழ  றுழழன' எனும் மரத்தையும் நட்டு பராமரித்து வருகின்றார். அத்தேர்டு இன்னும் பல அரியவகை மூலிகை மரங்கள் பயன்தரு மரங்களையும் தனது தோட்டத்தில் நட்டுள்ளார். இம்மரங்களை அரசாங்கத்தினால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட  தனியார் கம்பனி ஒன்றோடு கைச்சாத்திட்ட   ஒப்பந்தத்திற்கு அமைவாகவே  நட்டு பராமரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்க்கது.