ரஷ்ய வீரர் டானில் மெட்வடடேவிடம்,, தோற்றுப் போன நொவாக் ஜோகோவிச்


 


US Open Tennis: நொவாக் ஜோகோவிச்சின் கலைந்த பெரும் கனவு


வரலாற்றுச் சாதனையின் விளிம்பில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆடவர் இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் டானில் மெட்வடேவை எதிர்கொண்டார்.


இறுதிப்போட்டியில் சற்றும் எதிர்பாராத வகையில் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார் ஜோகோவிச். 25 வயதுடைய டானில் மெட்வடேவ் கிராண்ட்ஸலாம் போட்டிகளில் வென்ற முதலாவது சம்பியன் பட்டமாக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்தத் தோல்வியை #ஜோகோவிச் ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் சம்பியன்பட்டம் வென்ற மெட்வடேவ் கூறிய வார்த்தைகள் டென்னிஸ் உலகில ஜோகோவிச்சின் பெருமையை பறைசாற்றுவதாக இருந்தது. ‘ இந்த வருடத்திலும் உங்கள் டென்னிஸ் வாழ்விலும் நீங்கள் சாதித்தவை நீங்கள் தான் வரலாற்றில் மிகச்சிறந்த டென்னிஸ் வீரர் என்று கூறுவதில் பெருமைப்படுகின்றேன்’ என்றார் மெட்வடேவ் .


இம்முறை அமெரிக்க போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றிருந்தால் 1969ம் ஆண்டிற்குப் பின்னர் வருடத்தின் நான்கு கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் வென்ற வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றிருப்பார் . 1969ல் இந்த ச்சாதனையை அவுஸ்திரேலிய ஜாம்பவான் ரொட் லேவர் நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.