ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

கடற்படையினரால் தலைமன்னார் கடற்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (14) நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின்போது சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 9 கிலோ 914 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.