சவளக்கடை பகுதிகளில் உள்ள நாணல் காடுகள் எரிகின்றன


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



சம்மாந்துறை -சவளக்கடை பொலிஸ் எல்லை பகுதிகளில் உள்ள  நாணல் காடுகள் கடந்த 3 தினங்களாக  எரிந்து கொண்டு இருக்கிறன.

இதனால் குறித்த பகுதியை சூழவுள்ள சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ,மருதமுனை ,பெரியநீலாவணை ,பகுதிகளில் எரிந்த நாணல் கீற்றின் சாம்பல் துகள்கள் விழுந்துள்ளதை அவதானிக்க முடிகின்றதுடன் ஆற்றுப்படுகையில் மீண்டும் கடந்த காலங்களில் ஏற்பட்டதை போன்று  தீவிபத்து மீண்டும்  ஏற்பட்டதில்  நாணல்  மூங்கில் சருகு எரிந்து நாசமாகி வருகின்றது.

அப்பகுதியில்  தீ நன்றாக கொழுந்து விட்டு எரிந்ததால்  ஏக்கர் அளவுக்கு  ஏராளமான மூங்கில் தட்டு  நாணல் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகியுள்ளது.மேலும் அருகே எவ்வித குடியிருப்புகளும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமோ  பொருட்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் அதிகமான பறவைக்குஞ்சுகள் இறந்துள்ளதுடன் பாரிய பறவைகள் இதனால் இடம்பெயர்ந்துள்ளன.

கடந்த 3 தினங்களாக  இப்பகுதியில் வீசுகின்ற கடும் காற்றினால் குறித்த நாணல் காடுகள் உராய்விற்குட்பட்டு எரிந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.அத்துடன் சில  இனந்தெரியாதவர்களினால் பறவை மிருக வேட்டைக்காவும் குறித்த நாணல் காடுகள் எரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 மேலும் அப்பகுதியில் உள்ள  கிட்டங்கி  ஆற்றின்  மருங்கிலும் இவ்வாறான  மூங்கில் சருகு  நாணல்கள் காய்ந்து காணப்படுகிறது.நேற்று   மாலை  இப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.மேலும் இவ்வாறு எரிக்கப்பட்டு வருகின்ற நாணல்களில் குடியிருந்த  பறவைகள் சரணாலயங்கள் மிக விரைவாக அழிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது  இப்பகுதியில் வறட்சி காரணமாக கிட்டங்கி  ஆறு வறண்டு காணப்படுகிறதுடன்   ஆற்றின் மருங்கில் உள்ள   மூங்கில் சருகு  நாணல்கள் காய்ந்து காணப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.