ஹெல்விட்டாஸ் ஸ்ரீலங்கா நிறுவனமும் உலர் உணவுப்பொதிகளை வழங்கி வருகின்றது


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  கொவிட் தொற்று மற்றும் பயணத்தடை காரணமாக தமது தொழிலை இழந்த மக்களின் வாழ்க்கை நிலையினை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையில் பல்வேறு சமூக அமைப்புக்கள் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றது.  

இச்செயற்பாட்டில் ஹெல்விட்டாஸ் ஸ்ரீலங்கா நிறுவனமும் அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகத்தின் ஊடாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மூவினங்களுக்குமான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வருகின்றது.

இதன் அடிப்படையில் 5000 ரூபா பெறுமதியான 175 பொதிகள் மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் 20 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கியது

ஹெல்விட்டாஸ் ஸ்ரீலங்கா நிறுவனமும்  நிதி உத்தியோகத்தர் எஸ்.செல்வராஜ் மற்றும் அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகத்தின் தலைவர் ஜ.எல்.ஹாசிம் ஆகியோர் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் குறித்த பொதிகளை கையளித்த நிலையில் அவை கிராம உத்தியோகத்தர்கள் மூலமாக பயனாளிகளுக்கு உடன் வழங்கி வைக்கப்பட்டன.