சமுர்த்தி லொத்தர் நிதி மூலமாக நிர்மானிக்கப்பட்ட வீடு, - காசோலையும் வழங்கி வைப்புவி.சுகிர்தகுமார் 0777113659


சமுர்த்தி சௌபாக்கியா வார தேசிய வேலைத்திட்டம் சமுர்த்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இம்மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதி சமுர்த்தி சௌபாக்கியா வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு வேலைத்திட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையின் கீழ் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சமுர்த்தி வங்கியினுடாக தொழில் முயற்சி கடன் வழங்கல் மற்றும் சமுர்த்தி லொத்தர் வீடமைப்பு திறப்பு விழா  லொத்தர் மூலமாக வெற்றி பெற்றவர்களுக்கான காசோலை வழங்கல் மலசல கூடங்கள் கையளிப்பு போன்ற திட்டங்கள் இடம்பெறுகின்றன.

இதன் ஒரு கட்டமாக இன்று உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் மேற்பார்வையில் சமுர்த்தி பயனாளி ஒருவருக்கான சமுர்த்தி லொத்தர் காசோலை வழங்கப்பட்டதுடன் கோளாவில் 03 கிராமத்தில் சமுர்த்தி லொத்தர் நிதி மூலமாக நிர்மானிக்கப்பட்ட வீடும் திறந்து வைக்;கப்பட்டது.

நிகழ்வில்; முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன்  ; கருத்திட்ட முகாமையாளர் ஆர்.மதியழகன் ஆலையடிவேம்பு தெற்கு வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார்; சமுர்த்தி உத்தியோகத்தர் ரி.மதனிகா பி.அரியநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.