டி20 உலக கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டி



சாரதா உக்ரா --


9 ஆண்டு காலமாக இந்தியாவின் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு தனது தலைமைப் பதவியை விட்டு விலகுகிறார். கிரிக்கெட்டில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆட இருக்கும் நிலையில், விளையாட்டு எழுத்தாளர் சாரதா உக்ரா, டி 20 உலகக் கோப்பையை வெல்வதற்கான கோலியின் கடைசி வாய்ப்பு குறித்து எழுதுகிறார்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் பட்டாசுகளாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டிதான் முழு பட்டாசுப் பெட்டியே வெடிப்பதாக இருக்கும்.


ஐசிசி உலக டி 20 சர்வதேச தரவரிசையில், இங்கிலாந்துக்கு பின்னால் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3 வது இடத்தில் உள்ளது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிகளில் தரவரிசை முக்கியமில்லை. என்னவாக இருந்தாலும் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி இதயத்துடிப்பை எகிற வைக்கப்போவது நிச்சயம்.


எனினும் டி20 சர்வதேச தரவரிசை ஒரு குறிப்பைத் தருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், முன்னணி அணிகளில், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தியாவை விட குறைவான டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளன. அந்த நேரத்தில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வீரர்கள் உலகமெங்கும் உள்ள டி20 தனியார் லீக் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


அதனால் அந்த நாடுகளின் அணிகள் வென்றதை விட அதிகமாகத் தோற்றன. அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கு இப்போது வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. முயன்றால் டி 20 சர்வதேச போட்டிகளில் வெல்லக்கூடிய வாய்ப்பை அடுத்த மாதத்தில் பெற்றுவிட முடியும்.


கோலியின் ஒரே மற்றும் கடைசி வாய்ப்பு என்பதால், இந்தியாவைப் பொறுத்தவரை "கோலிக்காக வெல்வோம்" என்ற முழக்கம், இந்தப் போட்டிகளுக்கு எல்லைக் கோட்டை நெருங்கும் அவசர முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது.


உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு - எங்குள்ளது?

மனித குல வரலாற்றை கேள்விக்குள்ளாக்கும் ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள்

இந்தியா மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) ஆகிய இரு அணிகளுக்கான டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்த பிறகு, இந்திய கிரிக்கெட்டின் 360 டிகிரி "கோலிகேம்" பார்வை அதன் கேப்டன் மீது ஒட்டு மொத்தக் கவனத்தை குவித்துள்ளது.


கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த உலக கோப்பை டி20 போட்டிகள் முடிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2016-ஆம் ஆண்டு போட்டியின்போது கோலி இந்திய அணியில் வீரராக மட்டும் இருந்தபோது தோனி கேப்டனாக இருந்தார். அந்தப் போட்டியில் சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.


அந்தப் போட்டியில் ஆடிய கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா என பாதி அணி இந்தத் தொடரிலும் ஆடுகிறது. கூடுதலாக தோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார், அவர் தொட்டால் துலங்கும் என்ற நம்பிக்கையுடன்.


உலகக் கோப்பை போட்டிகள் என்று வரும்போது, தோனி தொட்டால் துலங்கும் என்றே அறியப்படுகிறது. இந்தியன் எஸ்க்பிரஸ் செய்தித்தாள் அவரை கோலியின் கேப்டன்சி பயிற்சியாளர் என்று எழுதியது.


ஐந்து முறை ஐபிஎல் வென்ற ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், அஸ்வின், ரிஷப் பந்த் என கோலியின் அணியில் ஏற்கனவே சில டி20 கேப்டன்கள் உள்ளனர் . காயமடைந்த கேன் வில்லியம்சனுக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்திய புவனேஷ்வர் குமாரையும் சேர்த்தால் எண்ணிக்கை ஐந்தாகிவிடும்.


டி20 போட்டிகளில் ஒவ்வொரு பந்துக்கும், ஒவ்வொரு ஓவருக்கும் கேப்டன் எடுக்கும் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் கிரிக்கெட்டின் இந்த ஒரு வடிவத்தில்தான் இந்தியாவின் உச்சநிலைத் தலைவர் தலைமைப் பண்புக்குத் தொலைவில் இருக்கிறார்.


தோனிக்குப் பிறகு (சிஎஸ்கே கேப்டனாக 203 போட்டிகள்) கோலியைத் தவிர (140 போட்டிகள்) வேறு யாரும் அதிக எண்ணிக்கையில் டி20 போட்டிகளுக்குத் தலைமையேற்கவில்லை. ஆனால் தோனியைப் போல வெற்றி தோல்வி விகிதத்தில் கோலி ஜொலிக்கவில்லை.


தன்னைச் சுற்றியுள்ள பிற கேப்டன்களைப் போலவும் கோலி வெற்றியாளர் இல்லை. ஆனால், தோனி அவர் பக்கத்தில் இருப்பது பலமாகும்.


கோலியின் தலைமையின் கீழ் தோனி 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். கோலியின் இருதரப்பு டெஸ்ட் போட்டிகளில் பாதிக்கும் மேலான வெற்றிகளில் தோனி பங்கேற்றிருக்கிறார். மைதானத்தில் கோலியின் காதில் தோனியால் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்றாலும், அவர் ஆடுகளத்தை அறிவது, அணியில் யார் ஆட வேண்டும் என்பதை முடிவு செய்வது போன்றவை புத்திசாலித்தனமாக ஆட உதவும்.


அணி தேர்வைச் சுற்றியுள்ள அறிவுரைகள்தான் இந்தியாவை புத்திசாலித்தனமாக விளையாட உதவும். ஒவ்வொரு போட்டியிலும் வென்றாக வேண்டும் என்ற கட்டாயம் கொண்ட ஒரு தொடரில், கோலி வேறு யார் பேச்சையும் கேட்கிறாரோ இல்லையோ, தோனியின் சொல்லைக் கேட்டாக வேண்டும்.


தனியார் டி20 லீக்குகளில் ஐபிஎல் முந்தி நிற்பதை கவனித்தில் கொண்டால், இந்தியர்கள் ஏன் இந்த வடிவமைப்பைப் பின்பற்றவில்லை, 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பைகளை வெல்லவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.


ஏனென்றால் ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டிகள் பரபரப்பானவை. அங்கு கூலான மூளையும், அமைதியான கைகளும் தேவை.


டி 20 என்பது கருத்துகளை உடைக்கும், சாதனைகளைத் தகர்க்கும், பழம் பெயர்களை மதிக்காத ஒரு மோசமான வடிவம். அது உடனடி எதிர்வினைகளைத்தான் அங்கீகரிக்கும்; பரிசளிக்கும்.


20 ஓவர் போட்டிகளின் போக்குகள் ஒவ்வொரு இரண்டு - மூன்று ஆண்டுகளுக்கும் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட விஷயங்கள் டிரெண்டில் இருந்தால் கூட அவற்றின் போக்கில் நல்ல செய்தி கிடைத்துவிடாது. மாறாக நிலைமையைச் சார்ந்து முடிவுகள் அமைகின்றன.


எந்த உத்தி வேலை செய்கிறது என்பதை நாளுக்கு நாள் இல்லையென்றாலும் போட்டிக்கு போட்டி கண்டறிந்து அதற்கு இசைவாகச் செயல்படுவதே முக்கியமான தேவை. ஒரு கட்டத்தில் அதிரடி மட்டையடி வீரர்கள், மாயஜால சுழற்பந்து வீச்சாளர்கள், அதிவேகப் பந்து வீச்சாளர்கள் ஆகியோர்தான் ஒரு கனவு டி20 அணிக்குத் தேவை என்றிருந்தது.


ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தவிர மந்தமான களங்களில் வலுவான கைகள் மட்டுமே வெற்றியைக் கொண்டுவந்துவிட முடியாது. அதிரடி பேட்ஸ்மேன்களை சுற்றி பேட்டிங் திறன் கொண்டவர்களும் அவசியம்.


அதிவேகப் பந்து வீச்சாளர்களும் காட்டடிகளால் பாதிக்கப்படலாம். குறிப்பிட்ட புள்ளி அளவுக்குத் துல்லிமாக குத்தச் செய்து இடது அல்லது வலது புறமாகத் திரும்பச் செய்யும் மெதுவான பந்துகளை வீசக்கூடியவர்கள் மதிக்கப்படுவார்கள்.


இப்போது இந்தியாவுக்குத் தேவை இடது கை அதிவேகப் பந்துவீச்சாளர். ஆனால் யாக்கர் மன்னன் நடராஜன் அணியில் இல்லை. கலீல் அகமது காயமடைந்திருக்கிறார்.


ஐபிஎல் போட்டிகளின் சிறப்பாக விளையாடிவர்களைக் கொண்டு இந்திய அணி மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் வருண் சக்கரவர்த்தியின் "மர்மமான சுழலுக்காக" இந்தியாவின் மிக வெற்றிகரமான டி 20 சர்வதேச பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலைத் தவிர்த்தை கவனிக்க வேண்டும்.


அதே நேரத்தில் ஷர்துல் தாக்கூரின் வேகப் பந்துவீ்ச்சுக்காக அக்சர் பட்டேலை மாற்றியது அணியின் அதிவேகப் பந்து வீச்சாளர்கள் எண்ணிக்கையை மூன்றில் இருந்து நான்காக அதிகரித்திருக்கிறது


நகத்தைக் கடிக்கத் தொடங்கும் முன், இந்தியாவின் ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகள் துபாயில் நடப்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஐபிஎல் போட்டிகளில் வெற்றிகரமான சேஸிங் மைதானமாக இருந்தது. இந்தியாவின் பேட்டிங் வரிசையைக் கணக்கில் எடுத்தால், எந்த ஒரு எண்ணிக்கையும் இந்தியாவுக்குப் பெரிதாக இருக்கக்கூடாது.


ஆனால் டாசில் தோற்று ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், ஐபிஎல் இறுதிப் போட்டி பற்றி தோனி அனைவருக்கும் நினைவூட்டுவார். ஷிகர் தவான் இல்லாதது ராகுலின் ஃபார்ம், ரோகித் சர்மாவின் பெரிய தருணத்துக்கான வேட்கை ஆகியவற்றால் நிரப்பப்படும்.


விராட் என்ன செய்வார்? இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் எழுந்திருக்கும் கேள்வி. இந்தியாவே கோப்பை வெல்லும் என சூதாட்டத்தில் ஈடுபடுவோர் பந்தயம் கட்டுகிறார்கள். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து. ஒவ்வொரு முக்கிய அணியும் அதைவிடவும்  போட்டி பலமாக இருக்கும் என்று நம்புகின்றன.




ஆனால் கோலிக்கு மட்டுமே தனது ஒரு உச்சமான பிரியாவிடையைத் தருவதற்கான வாழ்நாள் வாய்ப்பை இந்தப் போட்டி வழங்கும்.