காத்தான்குடியில், மது போதையில் சென்று மரணம் விளைவித்த வைத்தியர் விளக்க மறியலில்



 


#UPdate

இன்று அதிகாலை குட்வின் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் கார் வாகனத்தை செலுத்திய சாரதி விபத்து இடம்பெறும் போது மதுபோதையில் இருந்தார் என்று வைத்திய சான்றிதழ் தெரிவிப்பு.


 களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் பணி புரியும் இந்த வைத்தியரை நவம்பர் 10 ந் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் மன்று இன்று கட்டளையாக்கியது.

Kattankudy Accident Update:


காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (28) நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமோரு  இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


களுவாஞ்சிகுடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று முன்னே சென்ற மோட்டார் சைக்கிளை மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.


காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்தியில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்களில் காத்தான்குடி மெத்தை பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஏ. அம்ஹர் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.


மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த காரை செலுத்தி வந்தவர் பத்தரமுல்லையல சேர்ந்த ஒரு வைத்தியர் எனவும் இவர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்தியராக கடமையாற்றுவதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.


சம்பவ இடத்துக்குச் சென்ற காத்தான்குடி பொலீஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி. விராத் தென்னகோன் தலைமையிலான பொலீசார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த காரின் சாரதியான வைத்தியரை  கைதுசெய்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.