பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள்



 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் வருமானம் குறைந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் இஸ்லாமிக் ரீலிப் அமைப்பினர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இதன்போது மாணவர்களுக்கு தேவையான புத்தகப்பை அடங்கலாக கொப்பிகள் பாடசாலை சப்பாத்து என்பன வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் மகளிர் பிரிவைச் சேர்ந்த மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பிறா சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எல்.இஸ்பானா மகளிர் அபிவிருத்தி கள உதவியாளர் எஸ்.எ.எம்.எஸ்.பர்ஹானா உளவளத்துணை உத்தியோகத்தர் எ.எம்.சப்ரினா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.