.சுகிர்தகுமார் 0777113659
ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய கிழக்கு மாகாண ஆளுநரின்; அறிவுறுத்தல்களுக்கும் வழிகாட்டலுக்கும் இணைவாக கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆயுர்வேத பானம் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக பாரம்பரிய ஆயுர்வேத முறைகளுக்கமைய தயாரிக்கப்பட்ட உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆயுர்வேத பானம் முப்படையினருக்கும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் ஜ.எச்.எம்.வஹாப் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.ஏ.நபீல் கலந்து கொண்டு முப்படையினருக்கும் சுவதாரணி மூலிகை பானம்; வழங்கும் பணியை ஆரம்பித்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக இராணுவத்தின் அம்பாரை நீத்தை 11 ஆம் படைப்பிரிவின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நீத்தை முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யு டி. என்.டி. வீரசிங்க உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளிடம் ஒரு தொகை சுவதாரணி பொதியை வழங்கி வைத்தார்.
பின்னர் அம்பாரை மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் பி.செனவிரத்னவிடமும் பொலிசாருக்கு வழங்கும் வகையில் ஒரு தொகை சுவதாரணி பொதியை கையளித்தார்.
நிகழ்வில் வைத்தியர் ஏ.சி. டில்சான் உள்ளிட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேநேரம் இதுவரையில் அம்பாரை மாவட்டத்தில் 160000 ஆயிரம் சுவதாரணி பைக்கற்றுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.ஏ.நபீல் தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment