குறிஞ்சாக்கேணி படகு விபத்து உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு







கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்குண்டு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சற்றுமுன் மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதனடிப்படையில் கிண்ணியா படகுப் பாதை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் குறிஞ்சாக்கேணி 1ம் வட்டாரம் ஜொகரா உம்மா பாடசாலைக்கு அருகில் வசிக்கும் முகம்மது சுல்தான் முகம்மது றெபீஸ் என்பவருடைய 9 வயதுடைய மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.