(க.கிஷாந்தன்)
நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ருவான்புர பகுதியில் 10.11.2021 அன்று காலை 11 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது.
இப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு மேலும் சில சரிவுகள் சரியக்கூடிய அபாயம் இருப்பதால் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மண்சரிவை அகற்றி இயல்பு நிலை திரும்பும் வரை நாவலப்பிட்டியிலிருந்து ஹப்புகஸ்தலாவ மற்றும் கொத்மலை, பூண்டுலோயா, திஸ்பனை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்

Post a Comment
Post a Comment