.
(சுகிர்தகுமார்) 0777113659
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான சௌபாக்கியா வார வீட்டுத்தோட்ட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
'நிலையான வீட்டுத்தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் 2021' எனும் கருப்பொருளுக்கமைய இம்மாதம் 01 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதி சௌபாக்கியா வீட்டுத்தோட்ட வாரமாகவும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
'நிலையான வீட்டுத்தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் 2021' எனும் கருப்பொருளுக்கமைய இம்மாதம் 01 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதி சௌபாக்கியா வீட்டுத்தோட்ட வாரமாகவும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இன்று அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் காரியாலயத்தினால் வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கான விதைப்பொதிகள் கிராமங்களுக்கு சென்று இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.நிப்றாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விவசாய விரிவாக்கல் காரியாலயத்தின் உத்தியோகத்தர்களான ரிஏ.பிரியதர்சினி, எம்.ஏ.சில்மியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வீட்டுத்தோட்ட செய்கை சம்மந்தமான பயிற்சிகளும் நஞ்சற்ற விவசாயம் சம்மந்தமான தெளிவுகளும் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் வழங்கப்பட்டது.

Post a Comment
Post a Comment