வி.சுகிர்தகுமார் 0777113659
Search for common ground நிறுவனத்தின் அனுசரணையுடன் பாதிப்புற்ற பெண்கள் அரங்க நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் செயற்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைப் பெண் உறுப்பினர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட வில்கிளப்பினால் 4வது வில்கிளப் அமர்வு அம்பாறை மொண்டி ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அப்துல் அசீஸ்; வளவாளராக கலந்து கொண்டு உள்ளூராட்சி சபை பெண்களிற்குரிய சட்டங்கள் மற்றும் வகிபங்குகள் எனும் தலைப்பில் உள்ளூராட்சி சபைப் பெண்களுக்கும் மற்றும் பெண் சிவில் சமூக அமைப்பினருக்கும் விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து மதிய நேரம் இரண்டாவது வட்டமேசை மாநாடானது அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர்களுக்கும் உள்ளூராட்சி சபைப் பெண்களுக்கும் இடையே நடைபெற்றது.
இந் நிகழ்வில் உள்ளூராட்சி சபை பெண்களினால் அரசியலில் பெண்களின் பங்களிப்பும் கண்காட்சியும் எனும் தலைப்பில் கண்காட்சி நிகழ்வும் நடைபெற்றது. இந் நிகழ்வின் மூலம் உள்ளூராட்சி சபைப் பெண்களினால் செயற்படுத்தப்பட்ட செயற்திட்டங்கள் அனைத்தையும் ஊடகவியலாளர்களுக்கு காட்சிப்படுத்தும் நோக்கிலும் நெருங்கிய வலையமைப்பினை கட்டியமைப்பதற்கும் இந்நிகழ்வானது தளமாக அமைந்தது.
இதேநேரம் ஜூன் 05ம், 06ம் திகதிகளில் zoom செயலியின் மூலம் பாலினக்கூர் உணர்வுடைய செய்திகளை அறிக்கையிடல் பற்றி ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.
அப் பயிற்சியில் கலந்து கொண்ட ஊடகவியளாளர்களுக்கு இந் நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந் நிகழ்விற்கு search for common ground நிறுவன Gender advisor நளினி ரட்ணராஜா னுச. லவப்பிரதன் (ஆதார வைத்தியசாலை, அம்பாறை ) AWF இணைப்பாளர் வாணி சைமன் NGO Coordinator இர்பான்; மற்றும் வில் ரூ வேஜ் திட்ட இணைப்பாளர்களும்; கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment