(சுகிர்தகுமார்)0777113659
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சகல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கும் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று ஆரம்பமானது
சுகாதார மற்றும் தொற்று தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர். எம்.ஏ.எம்.முபாரிஸின் ஒருங்கிணைப்பில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் டாக்டர் அஸாத் .எம்.ஹனிபாவின் மேற்பார்வையில், இடம்பெற்ற தடுப்பூசி ஏற்றும் பணியில் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் அடிப்படையில் ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட ஊழியர்களுக்கே மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டது .
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நேற்று முதல் எதிர்வரும் 14 திகதி வரை பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment