ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக





முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுத்ததற்காக இராணுவத்தினரால் தாக்கப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீதான தாக்குதலைக் கண்டித்து முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது..


முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை காணொளிப் பதிவு செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளருக்கு உடம்பின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.