பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
கல்முனை மாநகர சபையின் 44 ஆவது மாதாந்த சபை அமர்வு திங்கட்கிழமை(29) மாலை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் சபாமண்டபத்தில் நடைபெற்ற போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாங்கேணி பகுதியில் இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இவ்வாறு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கொவிட்-19 பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலை காரணமாக வருமானம் இழப்பு மற்றும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே கல்முனை மாநகர சபை, தனது சேவைகளை முன்னெடுத்து வருகின்றது என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
இந்த அமர்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உட்பட உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Post a Comment
Post a Comment