ஆலையடிவேம்பு தெற்கு வலயத்திற்குட்பட்ட 7 சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டன.



 .சுகிர்தகுமார் 0777113659 

 

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை வலுவானதாக்கி அவற்றினூடாக சமுர்த்தி திட்டத்தின் பலாபலன்களை கிராம மட்டத்தில் இலகுவாக பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அலுவலகங்கள் கிராமங்கள் தோறும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஆலையடிவேம்பு தெற்கு வலயத்திற்குட்பட்ட 7 சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அலுவலகங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.
வலய முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் திட்ட முகாமையாளர் ஆர்.மதியழகன் வலய உதவி முகாமையாளர் கே.பி.ராஜசிறி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அலுவலகங்களை திறந்து வைத்தனர்.
குறித்த அடிப்படை அமைப்புக்களுக்கு சமுர்த்தி வங்கியினால் கடன் வழங்கப்பட்டு அவ் அமைப்பின் அங்கத்துவ சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சிறு கடன்களை இலகு முறையில் குறைந்த வட்டிவீதத்தில் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.