.சுகிர்தகுமார் 0777113659
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பும் கலந்துரையாடலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள 241ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேட் கொமாண்டர் ஏ.சி.அயகோன் நீத்தை முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யு டி.என்.டி.வீரசிங்க உள்ளிட்ட இராணுவத்தினர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் ஆலய குருமார்கள் ஆலய அறங்காவலர் சபையினர் சமயப்பெரியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளரின் தலைமை உரையில் ஆலயங்களின் சமூகப்பொறுப்புக்கள் தொடர்பில் சுட்டி காட்டினார். மேலும் இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்துவதன் அவசியத்தையும் அவர்களுக்கான தொழில் வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதன் முக்கியத்துவத்தையும் தெளிவு படுத்தினார். இதற்காக ஆலயங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பிலும் விளக்கினார்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச ஆலயங்களின் செயற்பாடுகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டதுடன் சமூகப் பொறுப்புக்கள் தொடர்பிலும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் சமூகத்தில் தற்போது நடைபெறுகின்ற கொள்ளை சூதாட்டம் இளைஞர்களின் தேவையற்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டன. இதேநேரம் இதற்கு பொருளாதார பின்னடைவும் காரணம் எனவும் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பல்வேறு சிக்கல்கள் தொடர்பிலும் சிலரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்குரிய தீர்வினை இராணுவத்தினரின் ஊடாக பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதன் பின்னராக உரையாற்றிய பிரிகேட் கொமாண்டர் மக்களுடன் இணைந்து சேவையாற்ற இராணுவம் எவ்வேளையிலும் தயாராகவுள்ளதாகவும் தங்களோடும் பிரதேச செயலகத்தோடும் பொதுமக்கள் இணைந்து பயணிக்கும்போது பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறினார். மேலும் இராணுவத்தினரின் முக்கிய தொலைபேசி இலக்கங்களை வழங்கி அவர்கள் தம்மோடு எவ்வேளையிலும்; தொடர்பு கொண்டு குறைபாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment
Post a Comment