ய்வு நிலை பேராசிரியரும்,இலங்கை வானொலியின் முன்னாள் தயாரிப்பாளருமாக விளங்கிய நாகேஸ்வரன் மறைவு





யாழ் நயினாதீவு, முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் , கொழும்பு 06 வதிவிடமாகவும் கொண்டிருந்த பேராசிரியர் நாகேஸ்வரன் (ஓய்வு நிலை பேராசிரியர்- இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம்/ மரபுவழி அரங்காவலர் - நயினை ஸ்ரீ நாகபூசணி கோவில் / இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயாரிப்பாளர்)
அவர்கள் 14.12.2021 செவ்வாய்க்கிழமை காலை இயற்கை எய்தினார்.
அன்னார் அமரர் பராமலிங்கம் கந்தசாமி கனகசபாபதி - கோகிலாம்பாள் தம்பதியரின் மூத்த மகனும், அமரர் பாலசிங்கம் பூமணி தம்பதியரின் மருமகனும் திருமதி ரதிமலர்தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ், குருபரன், தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
காயத்திரி, தாட்சாயினி, குமரன் ஆகியோரின் மாமனாரும்,
விஜயலட்சுமி, சுந்தரேஸ்வரன், கனகலட்சுமி ,மதிவதனி, மேனகா, ரேணுகா, கலைவாணி, நவநீதன் ஆகியோரின் சகோதரரும்,
அமரர் ராமஜெயம், சாந்தினி, மாசிலாமணி, பாலேந்திரா , அம்பிகைபாகன், ஹரிஹரன், அமரர் வரதராஜா, ஊர்மிளா,
விமலாதேவி,ஜெயராட்னராஜா, அமரர் ஜெகநாந்தராஜா, புவிமலாதேவி, அமரர் ஜெயபாலராஜா ஆகியோரின் மைத்துனரும்,
சேயோன், திவ்விஜீயன், ஓவியன், ஓவியா, இனியா ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மக்கள்,மருமக்கள்
தொடர்பு:
பிரகாஷ் - மகன் கொழும்பு 0774742106
குருபரன் - மகன் பிரான்ஸ் 0033769404484
தாரணி - மகள் கனடா 0016472426679
குமரன் - மருமகன் கனடா 0016477132210