ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்பைசர் வூஸ்டர் தடுப்பூசி




 (வி.சுகிர்தகுமார் 0777113659  


  30 வயதிற்கு மேற்பட்டர்களுக்கான பைசர் வூஸ்டர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 30 வயதிற்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றபட்;டு வருகின்றன.
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் இணைத்து தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் கோளாவில் வைத்திய பராமரிப்பு நிலையம் ஆகியவற்றிலும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
இதேநேரம் 30 வயதிற்கு மேற்பட்ட இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்களை கடந்த அனைவரும் தவறாது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் கோரிக்கை விடுத்தார்.