ரயில்வே தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது



 


ரயில்வே தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் பாதுகாவலர்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாட்டின் ரயில் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இந்த நிலையில் ரயில் சேவைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே பொது முகாமையாளருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.