இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பயணித்தஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது



 




நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் பயணித்துள்ளனர்.

இன்று மதியம் 11.00 - 11.30 மணியளவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் இதுவரை நான்கு பேர் இறந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. மீதமுள்ளவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இதுவரை ஐந்து பேர் மீட்கப்பட்டு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிபின் ராவத் பயணித்த Mi-17V5 ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப்படையும் உறுதிசெய்துள்ளது.