அம்பாறை மாவட்டத்தில் குடியேற்ற திட்டங்கள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது-சாணக்கியன் எம்.பி



 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


பிரதேச சபை தேர்தல் கேட்க வேண்டிய என்னை விமர்சித்து பாராளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்.தற்போது இன்று என்னை விமர்ச்சித்து விமர்ச்சித்து என்ன பதவி கிடைக்க போகின்றது என்று எனக்கு  தெரியாமல் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

அம்பாறை  மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி   இராசமாணிக்கம் அமைப்பினால் மாதிரிப் பரீட்சை வினாத்தாள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை  பாண்டிருப்பு நாவலர்   வித்தியாலயத்தில் வியாழக்கிழமை(6)  நடைபெற்ற போது அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் அங்கு தனது கருத்தில் தெரிவித்ததாவது

மாகாண சபை முறைமையினை பலவீனமாக்க வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் அக்கறையாக கிழக்கு மாகாண ஆளுநர் தொடக்கம் அதிகாரிகள் சிலரும் இருப்பது நிதர்சனமான உண்மையாகும்.இவ்வருடம் கிழக்கு மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி நிலைமையினை நோக்குவோமாயின் கவலையாகவே உள்ளது.இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதிகளில் நிர்வாகத்திற்கே நிதிகள் வழங்கப்பட்டுள்ளதே தவிர மேலதிகமாக வேலைத்திட்டங்களை செய்வதற்கான நிதிகள் வந்து சேரவில்லை.இவ்வாறு உள்ள நிலையில் மாகாண பாடசாலை விடயத்தில் எவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொள்வது என்பது சவாலான விடயமாகும்.அத்துடன் எமக்கான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்காமல் விட்டால் முழுமையாக எமது வேலைத்திட்டங்களை செய்ய முடியாது.கடந்த 74 ஆண்டுகளாகவே தீர்வு நிலைமை தொடர்ந்து வருகின்றது.எமக்கென அதிகாரங்கள் எமது கைகளில் இருக்க வேண்டும்.இன்று கல்முனை என்றாலே கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மட்டும் தான் பேசப்படும் விடயமாகும்.கல்முனை என்று இன்று நான் சொன்னால் கூட எனக்கு எதிராக விமர்சனங்கள் வரும்.மாணவர்களின் கல்வி தொடர்பில் அக்கறை யை நாம் செலுத்த வேண்டுமாயின்  நிரந்திர அரசியல் தீர்வினை அடைய வேண்டும்.