தாண்டியடியில் விபத்தினால் மரணம் விளைவித்த சாரதிக்கு விளக்கமறியல்



 


அக்கரைப்பற்று 02 2/3 பொது வீதியைசேர்ந்த #மிப்தார் தாண்டியடியில் இடம்பெற்ற வாகன விபத்தில், புதன் கிழமையன்று உயிரிழந்தார்.

இவர் சென்ற மோட்டார் சைக்கிள், ரிப்பர் ஒன்றுடன் மோதி கடுங்காயமுற்று அம்பாரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் ரப்பர் வாகனத்தைச் செலுத்திய சாரதி திருக்கோவில் பொலிசாரால், கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் வியாழக்கிழமை அக்கரைப்பற்று பொலிசாரால் ஆஜர் படுத்தப்பட்ட வேளையில எதிர்வரும் 20ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று கெளரவ நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா கட்டளையிட்டார்