அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு



 


அனைத்து அரச ஊழியர்களையும் நாளை (03) முதல் வழமை போன்று கடமைகளுக்கு திரும்புமாறு பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு சமூகமளிக்குமாறு அமைச்சின் செயலாளர் J.J.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், அரச ஊழியர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது என அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், அரச ஊழியர்களை வழமை போன்று பணிக்கு அமர்த்தும் அறிவிப்பை, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.