வாசுதேவ நாணயக்காரவக்கு நல்லாசி வேண்டிய பூஜை வழிபாடுகள்



 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டிய பூஜை வழிபாடுகள் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பி.எச்.பியசேன கிருத்திகன் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.

அக்கரைப்பற்று ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற புஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கஜமுகசர்மா நடாத்தி வைத்தார்.

இதன்போது அமைச்சருக்கு நல்லாசி வேண்டிய பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த இணைப்பாளர் கிருத்திகன் அமைச்சரின் உதவியினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் குடிநீர் இணைப்புக்கள் வழங்கபடாத பிரதேசங்களுக்கு இணைப்பு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் காலத்திலும் இன்னும் பல அபிவிருத்திகள் அமைச்சின் உதவியோடு இடம்பெறும் என கூறினார்.