வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பிராந்திய காரியாலயம், திருக்கோணமலை உட்துறைமுக வீதியில்




வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பிராந்திய காரியாலயம் ஒன்று திருக்கோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது. 


அதாவது வெளிநாடுகளுக்கு செல்ல வீசா அனுமதியை பெறும்பொருட்டு தூதரகங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் வெளிநாட்டு அமைச்சில் சான்றுறுதிப்படுத்த (Document Attestation) வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை திருக்கோணமலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் செய்துகொள்ள முடியும். 


அதாவது பேச்சுவழக்கில் 'Foreign Ministry seal அடித்தல்' என்று சொல்லப்படும் ஆவண சான்றுறுதிப்படுத்தல், வெளிநாடுகளில் நிர்கதியான நிலையில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்துவரல், வெளிநாடுகளில் இறந்தவர்களின் உடல்களை கொண்டுவருதல், வெளிநாடு ஒன்றில் இருந்து வரவேண்டிய நஷ்டஈடு மற்றும் பெறுவனவுகளை பெறல் போன்ற சேவைகளை இங்கு பெற்றுக்கொள்ள முடியும். 


கொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியமில்லை. அனைத்துவிடயங்களையும் திருக்கோணமலை அலுவலகத்தில் நிறைவேற்றி கொள்ளமுடியும். 


மக்கள் தேவையற்ற சிரமங்களுக்கு உள்ளாகாமல் இருக்க தயவுசெய்து இதனை பகிர்ந்து உதவுங்கள்.


Address: 

Chief Minister’s Secretariat, 

Inner Harbour Road, Trincomalee


Operating Hours: 

Monday to Friday: 8:30am to 4.15pm


அலுவலக தொலைபேசி இலக்கம்:- 

0262223182.


E-mail: trincomalee.consular@mfa.gov.lk


Aazath Atham Lebbe