யோகாசனம் பண்ணிசை பரதக்கலை வகுப்புகள் ஆரம்பம்.



வி.ரி.சகாதேவராஜா)
 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில்  இயங்கிவரும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவக சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தில் தெய்வீகக்கலை பயிற்சிவகுப்புகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.


ஆன்மீக முன்னேற்றத்திற்கும் மன ஒருமைப்பாட்டுக்கும் ஆரோக்கிய வாழ்விற்கும்  வழிகாட்டும்  தெய்வீகக் கலைகளைப் பயில்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துத்தும் நோக்குடன் யோகாசனம் பண்ணிசை பரதநாட்டியம் போன்ற 6மாதகால பயிற்சிநெறிகள் நேற்றுமுன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

ஆரம்ப நிகழ்வானது காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தபணிமன்ற தலைவர் வெ.ஜெயநாதன் மற்றும்  வளவாளர்களான திருமதி புவனேஸ்வரி ஜெயக்கணேஸ் ,திருமதி ரவீந்திரன் யோகேஸ்வரி  ,திருமதி சர்மினி சுதாகரன் செல்வி ஜெ.தட்சாலினி , கு.குமாரதாசன் ,க.கோகுலராமன் மற்றும் இந்துக்கலாசார உத்தியோகத்தர்களான காரைதீவு செயலக உத்தியோகத்தர் திருமதி சிவராஜா சிவலோஜினி, சம்மாந்துறை பிரதேசசெயலக உத்தியோகத்தர் திருமதி  ஶ்ரீபிரியா கங்கைநாதன் ,மாவட்டச்செயலக உத்தியாகத்தர்கள் ந.பிரதாப்  கு. ஜெயராஜி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.