போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம






போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம

போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம நியமனம்

அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் சிலர் இன்று (03) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்த நிலையில், திலும் அமுனுகம நாளை பெரும்பாலும் பதவிப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிப்பட்ட பயணமாக அவர் நுவரெலியா சென்றுள்ளதன் காரணமாக இன்றைய தினம் அவர் பதவிப்பிரமாணம் செய்யவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

திலும் அமுனுகம தற்போது வாகன ஒழுங்குறுத்துகை, பேருந்து போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[facebook][blogger]

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.