வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்தில் வாழும் மக்களும் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் சித்திரைப்புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
வழமைக்கு மாறாக குறைந்தளவான மக்களே பொருட்கொள்வனவிலும் ஆடைக்கொள்வனவிலும் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
பொருட்தட்டுப்பாடு பணத்தட்டுப்பாடு போன்ற காரணிகள் புத்தாண்டில் தாக்கம் செலுத்தியபோதும் மக்கள் புத்தாண்டை இன்முகத்துடன் வரவேற்க காத்திருப்பதையும் காண முடிந்தது.
இதேநேரம் புதுவருடத்தின் பின்னராவது நாட்டில் சுமூகமான நிலை உருவாக வேண்டும் என்பதே பலரது பிரார்த்தனையாக இருக்கின்றது.
இந்நிலையில் நடமாடும் விற்பனை நிலையங்கள் குறைந்தளவில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர் வியாபாரிகளின் வருகையும் குறைந்தே காணப்பட்டது.
சதொச போன்ற அரச விற்பனை நிலையங்களிலும் தேவையான அளவிற்கு பொருட் கொள்வனவு செய்ய முடியாத நிலை உள்ளதையும் மக்கள் கருத்துக்கள் மூலம் அறிய முடிகின்றது.
எனினும் பழவகைகள் மரக்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் சந்தையில் தேவையான அளவு காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment