வி.சுகிர்தகுமார்
பொருட்தட்டுப்பாடு நீரில்லா பிரச்சினை மின்சாரம் துண்டிப்பு போன்ற துன்பங்களுக்கு மத்தியிலும் மக்கள் அமைதியாக உள்ளமையை பெரிய விடயமாக பார்க்க வேண்டியுள்ளது. அதற்காக உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றி கூறவேண்டும் என அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் அதாவுல்லா அகமட் சகி தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் நேற்று மாலை தனியார் விடுதியில் இடம்பெற்ற ரெயின் றொப்ஸ் பாலர் பாடசாலை ஒன்றின் விடுகை விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஒரு நிகழ்விற்கு சென்று மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க முடியாத பேசமுடியாத நிலை எல்லோருக்கும் தோன்றியுள்ளது. காலையில் எழுந்தால் பொருட்கள் கிடைக்குமா என்ன பொருளுக்கு விலையேற்றப்பட்டுள்ளது என சிந்திக்க வேண்டியுள்ளது.
நோன்பு ஆரம்பமான நிலையில் நமக்கு மின்சாரம் கிடைக்குமா? நாட்டில் எந்த மூலையில் என்ன நடைபெறப்போகின்றது என்ற அச்சத்தோடு காலத்தை கடத்த வேண்டியுள்ளது. குறைந்தது நீரையாவது அருந்தி வாழ்க்கையை கடந்தலாம் என பார்த்தால் நீர் நிலைகளில் உள்ள இயந்திரத்தை இயக்கவும் எத்தனையோ லீற்றர் பெற்றோல் தேவைப்படுவதாக கூறுகின்றார்கள். இதனால் நீரும் கிடைக்காது என கூறுகின்றனர் என்றார்.
பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எம்.ஏ.அஸ்பி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் அக்கரைப்பற்று வலய கல்வி அலுவலக உதவிக்கல்விப்பணிப்பாளர் மற்றும் சிறுவர் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதேநேரம் சிரேஸ்ட ஊடகவியலாளரும் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவருமான கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப உதவியாளரும் ஊடகவியலாளருமான றமீஸ் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் றாசிக் உள்ளிட்டவர்களும் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன் பாலர் பாடசாலையின் பணிப்பாளரால் வழங்கப்பட்ட நினைவுச்சின்னத்தினையம் பெற்றுக்கொண்டனர்.

Post a Comment
Post a Comment