(படங்கள்்சட்டத்தரணி இயாஸ்தீன்)
இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள் கலந்து சிறப்பித்தனர்
இந்த ஏப்ரல் மாதம் 4 முதல், பண்டாரவளை நீதிமன்றத்துக்கு மாற்றலாகி செல்லும் நீதிபதி திருமதி ஜீவராணி அவர்களுக்கு சட்டத்தரணிகளால் ஓவியரால் வரையப்பட்ட அவரது புகைப்படத்தைத் தாங்கிய நினைவு படிகம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் அண்மையில் நீதிபதியாக நியமனம் பெற்ற கெளரவ நீதிபதி சாஜித் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
கடந்த 4 வருடங்களாக சட்டத்தரணிகளுடனும், கட்சிக்காரர்களுடன் மிகவும் அந்நியோன்மாகப் பழகி அவர்களின் வழக்குகளை விரைவாக முடித்து தீர்ப்புக்களை வழங்கியதுடன் மக்களுக்கான நீதியை நிலை நாட்டுவதற்கு அரும்பணியாற்றிய கௌரவ நீதிபதி அவர்களின் சேவையினை சட்டத்தரணிகள் நன்றி நவிலுடன் இரைமீட்டினர்.
தனக்கு களுவாஞ்சிகுடி மறறும் ஏறாவுர் சட்டத்தரணிகளுடன் பணிபுரியக் கிடைத்தமை மகவும் மகிழ்சியளிப்பதாகவும் தனது சொந்தப் பிள்ளைகளைப்போல சட்டத்தரணிகளுடன் பழகிய நாட்கள் மறக்க முடியாதது எனபதை நன்றிப் பெருக்குடன் நீதிபதி நினைவு கூர்ந்தார்.
சட்டத்தரணிகளால் பிரியாவிடை பெற்றுச் செல்லும் கௌரவ நீதிபதிக்கு வழங்கப்பட்ட பகல் உணவுடன் பிரியாவிடை நிகழ்வு நிறைவுற்றது.










Post a Comment
Post a Comment