.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அலிக்கம்பை தேவகிராமத்தில்; இலங்கை சிறுவர் புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் அமையவுள்ள வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (26)நடைபெற்றது.
அலிக்கப்பை புனித சவேரியர் தேவாலயத்தின் பங்குத்தந்தை அருள்ராஜா அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கலந்து கொண்டதுடன் இலங்கை சிறுவர் புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகர் சாமில கொடகொட உள்ளிட்ட கிராமத்தின் மக்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதகள் வரவேற்கப்பட்டதுடன் விசேட பூஜை ஆராதனையினை புனித சவேரியர் தேவாலயத்தின் பங்குத்தந்தைதந்தை அருள்ராஜா நடாத்தி வைத்தார்.
அத்தோடு பிரதேசத்தின் நீண்டகால தேவையாகவும் அதிமுக்கியத்துவம் பெற்றதுமான வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டதுடன் அமைவிடத்திற்கான அனுமதி உள்ளிட்ட தேவைப்பாடுகளை முன்னின்று செயற்படுத்திய பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவித்தார்.
அத்தோடு மக்களின் நலன் கருதி பெரும் நிதியை ஒதுக்கி வைத்தியசாலை கட்டட வேலையினை ஆரம்பித்து வைத்துள்ள இலங்கை சிறுவர் புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகர் உள்ளிட்ட அனைவருக்கும் இறைவன் அருள் கிடைக்க தேவனை ஆராதனை செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகள் வைத்தியசாலைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
குறித்த வைத்தியசாலை அமைவதன் மூலம் சுமார் 15 கிலோமீற்றருக்கு அப்பால் சென்று வைத்திய சிகிச்சை பெறும் மக்களின் நடவடிக்கை இலகுபடுத்தப்படுவதுடன் இந்நடவடிக்கையானது அலிக்கம்பை கிராமத்தை பொறுத்தவரையில் வைத்தியசேவையில் ஒரு மைல்கல்லாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Post a Comment
Post a Comment