நாட்டில் தற்போது பெற்றோல் போதுமான அளவு கையிருப்பில் இல்லாத காரணத்தினால் அடுத்துவரும் இரண்டு நாட்களுக்கு வரிசையில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் இன்றும் நாளையும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்காக மாத்திரமே பெற்றோல் வழங்கப்படும் எனவும், வார இறுதியில் பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, தற்போது நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான டீசல் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
.jpg)

Post a Comment
Post a Comment