இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த ஜூலை 19 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
ஆளும் மத்திய அரசான பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டிருந்த நிலையிலேயே, தற்போது திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார்.


Post a Comment
Post a Comment