- அகமதாபாத்தை விட்டு மும்பைக்குச் சென்று வைர வியாபாரத்தில் இறங்கினார்.
- 1988ஆம் ஆண்டு தன் சகோதரர்களில் ஒருவரின் பிளாஸ்டிக் ஆலையை நிர்வகிக்க மீண்டும் குஜராத் வந்து, தனக்கென சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கி தன் தொழிலதிபர் கனவுக் கோட்டைக்கு அடித்தளமிட்டார் அதானி. அந்த நிறுவனத்தின் பெயர் தான் அதானி என்டர்பிரைசஸ்.
- அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை தொடங்கிய கெளதம், அதன் பிறகு தன் வாழ்கையில் எதற்காகவும், யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை. 1994-ல் இந்திய பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைஸ் நிறுவனத்தை பட்டியலிட்டார்.
- 1995-ல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை வென்றார். 2000-ல் சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் விற்பனை செய்யத் தொடங்கினார். 2001-ல் சமையல் எரிவாயு விநியோகம் தொடங்கப்பட்டது.


Post a Comment
Post a Comment